” மகனை பார்க்க சென்றால் கார் நிறுத்துமிடத்தில் தான் தூக்கம் ” – எலான் மஸ்க் தாய்

‘மகனை பார்க்க அவரது வீட்டுக்கு சென்றால், கார் நிறுத்துமிடத்தில் தான் தூங்குவேன்’ என உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க்கின் தாய் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்த எலான் மஸ்க்கின் தாய், மேயி மஸ்க் கூறியதாவது: என் மகன் உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும், டெக்சாஸில் இருக்கும் ஸ்பேஸ் எக்ஸ் அவரது வீட்டிற்கு சென்றால், அங்கு கார் நிறுத்துமிடத்தில் தான் தூங்குவேன். ராக்கெட் விடும் இடத்தில் சொகுசு வீட்டை எதிர்பார்க்க முடியாது. எலான் போல செவ்வாய் கிரகம் செல்லும் ஆசை எனக்கு கிடையாது. ஆனால் என் பிள்ளைகள் விரும்பினால், அதை நான் செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

உலகின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைவராக அவர் உள்ளார். கோடீஸ்வரராக இருந்த போதும், தனக்கு சொந்தமாக வீடு இல்லை எனவும், நண்பர்களுடன் தங்குவதாகவும் அவர் முன்பு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.