விமானம் தாங்கி கப்பல் அமெரிக்கா செல்லும் வழியில் பழுது

பிரிட்டனின் மிகப்பெரிய விமானம் தாங்கி போர் கப்பலான ‘எச்.எம்.எஸ்., பிரின்ஸ் ஆப் வேல்ஸ்’ அமெரிக்கா செல்லும் வழியில் பழுதடைந்தது.

ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ‘போர்ட்ஸ்மவுத்’ கடற்படைத் தளத்தில் இருந்து, பிரின்ஸ் ஆப் வேல்ஸ் விமானம் தாங்கி போர் கப்பல், அமெரிக்காவுக்கு 27ல் கிளம்பியது. ‘வட அமெரிக்க மற்றும் கரீபியன் கடற்கரை பகுதியில், அதி நவீன போர் விமானங்கள் மற்றும் ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா விமானங்களின் செயல்பாடுகளை எதிர்கொள்வது குறித்த கூட்டுப் பயிற்சிக்காக இந்த போர்க்கப்பல் புறப்பட்டது’ என, பிரிட்டன் கடற்படை அறிவித்திருந்தது.

இந்நிலையில், ‘6.50 கோடி கிலோ எடையுள்ள இந்தக் கப்பல், பிரிட்டனின் தெற்கு கடற்கரையில் பழுதடைந்ததையடுத்து, நங்கூரமிடப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது. இதில், ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகளை சரிசெய்யும் பணியில் வல்லுனர்கள் ஈடுபட்டுள்ளனர்’ என, பிரிட்டனின் கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.