பிறக்கிற குழந்தைகளின் பெயருக்குப் பின்னால் தந்தை, தாய் என இருவரது பெயரையும் சேர்க்குமாறு இத்தாலி நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுவரை தந்தையின் பெயரை மட்டுமே தனது பெயருக்கு பின்னால் குழந்தைகள் கொண்டிருந்தது, இது பாகுபாடு மற்றும் அடையாளத்துக்கு கேடு விளைவிக்கும் என்று தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் தாய், தந்தை இருவரும் ஒப்புக்கொண்டால், யாராவது ஒருவரது பெயரை தங்கள் பெயருக்கு பின்னால் குழந்தைகள் கொண்டிருக்கலாம் எனவும், தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த அரசியல் அமைப்பு நீதிமன்ற தீர்ப்புக்கு ஏற்ப, இத்தாலி பாராளுமன்றம் இப்போது ஒரு புதிய சட்டம் இயற்ற வேண்டும். நீதிமன்ற தீர்ப்பை அரசு முழுமையாக ஆதரிப்பதாக, இத்தாலி குடும்ப மந்திரி எலினா பொனெட்டி தெரிவித்துள்ளார்.