2022 இல் CO₂ (காபனீரொக்சைட்) உமிழ்வுகள் வெகுவாக அதிகரித்து உள்ளது.

காபனீரொக்சைட்டின் உமிழ்வைக் குறைப்பதாக உறுதியளிக்கப்பட்ட போதிலும்,  இந்த ஆண்டு CO₂ இனது அளவினை நோக்கும்போது உலகில் இதற்கு முன் எப்போதும் காபனீரொக்சைட் வாயு அதிகரித்ததில்லை என புதிய சூழல் அறிக்கை தெரிவிக்கிறது.

உலகம் இந்த ஆண்டு 37.5 பில்லியன் தொன் CO₂ வெளியிட உள்ளது என குளோபல் கார்பன் (Global Carbon Project) திட்டம் வெளியிடுகிறது.

பாரிஸ் ஒப்பந்தத்தின் படி அனைத்து வாக்குறுதிகளும் இருந்தபோதிலும், புதைபடிவ மூலங்களிலிருந்து உலகளாவிய CO₂ உமிழ்வுகள் 2015ம் ஆண்டினை விடவும்
5 சதவீதம் அதிகமாகியுள்ளது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 1.0 சதவீதம் அதிகரித்துள்ளது. இது கடந்த பத்தாண்டுகளின் சராசரியை விட இரண்டு மடங்கு அதிகம், அதாவது ஆண்டுக்கு 0.6 சதவீதம் அதிகரிக்கிறது என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE