
அமெரிக்காவில் நடுவானில் இரண்டு சிறிய ரக விமானங்கள் மோதியதில், மூன்று பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின், கொலராடோ மாகாணத்தின் தலைநகரான டென்வர் நகரில் இருந்து, 48கி.மீ. தொலைவில் உள்ளது லாங்மோன்ட். இப்பகுதியில் நேற்று இரண்டு சிறிய ரக விமானங்கள் வானில் பறந்துகொண்டிருந்தன.
ஒரு விமானத்தில் இரண்டு பேரும், மற்றொன்றில் ஒருவரும் இருந்தனர். அப்போது, திடீரென இந்த இரண்டு விமானங்களும் ஒன்றுடன் ஒன்று மோதி நொறுங்கி விழுந்தன. இதில் மூன்று பேரும் உயிரிழந்தனர். இறந்தவர்கள் குறித்த விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை.