அடுத்த வாரம் நேட்டோ அமைப்பின் அவசர கூட்டம்

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் பற்றி விவாதிக்க அமெரிக்க அதிபர் ஜோ-பைடன் தலைமையில் நேட்டோ அமைப்பின் கூட்டம் அடுத்த வாரம் பெல்ஜியத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேட்டோ அமைப்பின் பொதுச்செயலர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு ஒன்றில் வருகின்ற 24-ம் திகதி பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் நேட்டோ அமைப்பின் அவசர கூட்டம் நடைபெற இருப்பதாக கூறியுள்ளார்.

30 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் இந்த கூட்டத்திற்கு தலைமை வகிக்கும் அமெரிக்க அதிபர் ஜோ-பைடன், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பின் விளைவுகளை பற்றி பேச இருப்பதாக கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE