பரிஸ் நகர காவல்துறையினருக்கு – நவம்பர் மாதம் வரை தண்டப்பணம் அறவிட தடை!

நேற்று திங்கட்கிழமை முதல் பரிசுக்கு என பிரத்யேகமாக காவல்துறையினர் (Police Municipale) அறிமுகப்படுத்தப்பட்டனர்.

பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ இந்த புதிய படைப்பிரிவை அறிமுகம் செய்து வைத்தார்.

மொத்தமாக 154 அதிகாரிகள் கடமையில் ஈடுபடுகின்றனர். இன்று செவ்வாய்க்கிழமை முதல் அவர்களை பரிசில் வெவ்வேறு வட்டாரங்களில் கடமையில் ஈடுபடுவதை காணலாம்.

ஆனால் அவர்கள் கண்காணிப்பில் ஈடுபடுவார்களே தவிர, தண்டப்பணம் அறவிடுவதற்கோ, அல்லது கைது செயவற்கோ ‘இப்போது வரை’ அனுமதி அளிக்கப்படவில்லை.

தற்போது கடமையில் ஈடுபடும் அனைத்து அதிகாரிகளும் ‘உறுதிமொழி’ எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் மாத ஆரம்பம் வரை அவர்களால் எவ்வித தண்டப்பணமும் அறவிடப்பட முடியாது.

பரிசுக்கு என தனியே ஒரு காவல்துறை படையை உருவாக்குவது ஆன் இதால்கோவின் நீண்டகால திட்டம்.

அதில் தற்போது தான் முதல் கட்ட வெற்றியை ஆன் இதால்கோ பெற்றுள்ளார்.

2026 ஆம் ஆண்டுக்குள் 3,400 அதிகாரிகள் இந்த படையில் கடமையாற்றுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE