2022 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை பெலருஸ் நாட்டை சேர்ந்த Ales Byaljatski, ரசிய நாட்டை சேர்ந்த Memorial என்ற அமைப்பும், உக்ரைனை சேர்ந்த Centre for Civil Liberties என்ற அமைப்பும் பெற்றுள்ளன.
ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் அமைதிக்காக போராடுபவர்களை நோபல் குழுவினர் தேர்ந்தெடுத்து உள்ளனர்.
Ales Byaljatski:
எழுத்தாளரான Ales Byaljatski பெலருஸ் என்னும் நாட்டை சேர்ந்தவர். இவர் நீண்ட காலமாக மனித உரிமைகளுக்காக போராடுபவர்.
2011 – 2014 ஆண்டுகளுக்கிடையில் Ales Byaljatski அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 2020 இல் மீண்டும் அந்த நாட்டு அதிகாரிகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டமையால் அவர் கைது செய்யப்பட்டார். தற்போதும் அவர் சிறையிலேயே உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Memorial:
Memorial என்ற அமைப்பு மனித உரிமைகளுக்காகப் போராடுகிறது. 1987 இல் மனித உரிமை ஆர்வலர்கள் இந்த அமைப்பினை ஆரம்பித்தனர். ஆட்சியாளரின் அடக்குமுறையால் பாதிக்கப்பட்டவர்களை ஒருபோதும் மறக்க முடியாது என்பதை உறுதிப்படுத்தி, பணியாற்றி வருகின்றனர்.
Center for Civil Liberties:
2007ல் உக்ரைனில் உள்ள Kyiv நகரில் Center for Civil Liberties ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்பு ரஷ்ய போர்க்குற்றங்களை ஆவணப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.