கனேடிய மாகாணம் ஒன்றுக்கு புயல் காரணமாக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கைகள்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்துக்கு புயல் காரணமாக பலத்த காற்று குறித்த எச்சரிக்கையும், மின்சார ஒயர்கள் தொடர்பான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

’வெடிகுண்டு புயல்’ என வர்ணிக்கப்பட்டுள்ள புயல் ஒன்று தாக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதைத் தொடர்ந்து, இன்று பல இடங்களுக்கு படகுப்போக்குவரத்து ரத்துசெய்யப்பட்டுள்ளது.

அத்துடன் ஏற்கனவே பலத்த காற்று தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மணிக்கு 70 முதல் 90 கிலோமீற்றர் வேகத்துக்கு பலத்த காற்று வீசும் என பல இடங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வான்கூவர் தீவின் மேற்கு கரையை புயல் கடுமையாக தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு மணிக்கு 80 முதல் 100 கிலோமீற்றர் வேகத்துக்கு காற்றுவீசலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று மதியம் 3.30 மணி நிலவரப்படி, தெற்குக் கரைப்பகுதியில் உள்ள 20,000 வீடுகள் மின் தடையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், அறுந்து விழுந்த மின்சார ஒயர்களைக் கண்டால், அவற்றின் அருகில் செல்லவேண்டாம் என்றும், உடனடியாக அவசர உதவியை அழைக்குமாறும் மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அணுகுண்டு புயல் என்பது, காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக உருவாகி 24 மணி நேரத்தில் தீவிரமடையும் ஒரு வானிலை நிகழ்வாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE