வெளிநாடொன்றில் கோர விபத்து: பரிதாபமாக பலியான விமானி

இந்தோனேசியாவில் சரக்கு விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணமான பப்புவாவின் புன்காக் மாவட்டத்தில் உள்ள விமான நிலையத்தில் சரக்கு விமானம் இன்று திங்கட்கிழமை (25) விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழந்ததாகவும், மற்றும் துணை விமானி காயமடைந்திருப்பதாக என்று இந்தோனேசிய போக்குவரத்து அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அதிதா இராவதி சின்ஹுவாவிடம் தெரிவித்தார்.

இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள பப்புவா மாகாணத்தில் தனியாருக்கு சொந்தமான சரக்கு விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானம் திடீரென தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் விமானி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இந்த விமான விபத்து குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.