இலங்கை பெற்றோர்களுக்கு இராணுவ தளபதி விடுக்கும் கோரிக்கை..!

நாட்டில் நிலவும் கொவிட் நிலைமைக்கு மத்தியில் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பும் போது பெற்றோர் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா கேட்டுக்கொண்டுள்ளார்.

200 இற்கும் குறைவான மாணவர்கள் கொண்ட பாடசாலைகள் நேற்று முதல் திறக்கப்பட்டுள்ளன.

எனினும் மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்பும் போது பிள்ளைகளுக்கு சுகாதார ஆலோசனை வழங்கி அனுப்ப பெற்றோர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.பாடசாலைகளுக்கு வரும் பெற்றோர்களை உட்பட பிள்ளைகளை சந்திக்கும் போது முகக் கவசத்தை அகற்ற வேண்டாம் என்ற விடயத்தை பிள்ளைகளுக்கு தெரியப்படுத்தி அனுப்புங்கள்.

அத்துடன் ஏனைய சுகாதார வழிமுறைகள் அனைத்தையும் உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என பிள்ளைகளுக்கு தெரியப்படுத்துவது பெற்றோர்களின் கடமையாகும்.

பாடசாலைகளுக்கு அனுப்பும் போதும், பிள்ளைகள் வீடு திரும்பும் போதும் அவர்கள் தொடர்பில் பெற்றோர் தீவிர அவதானம் செலுத்த வேண்டும் என இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.