ஆல்பர்ட்டாவின் கல்கரி நகரில் முதல் பெண் மேயராக தெரிவாகியுள்ளார் ஜோதி கோண்டெக்.
கல்கரி நகரின் புதிய மேயராக பொறுப்பேற்கவிருக்கும் ஜோதி கோண்டெக், தமது பரப்புரை குழுவினருக்கும், தன்னார்வலர்களுக்கும் குடும்பத்தினருக்கும் நன்றியை தெரிவித்துள்ளதுடன், தம்மை பொதுவாழ்க்கைக்கு ஊக்குவித்த, மறைந்த தமது தந்தைக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
மேயர் பதவிக்கு மொத்தம் 26 பேர் போட்டியிட்டதில் 45 சதவீத வாக்குகள் பெற்று ஜோதி கோண்டெக் வெற்றி பெற்றுள்ளார். எதிர்வரும் 25ம் திகதி ஜோதி கோண்டெக் கல்கரியின் முதல் பெண் மேயராக பொறுப்பேற்க உள்ளார். பிரித்தானியாவின் லண்டனில் பிறந்த ஜோதி கோண்டெக், இந்திய வம்சாவளியினரான ஜஸ்டேவ் சிங் கிரெவால் மற்றும் சுர்ஜித் கவுர் க்ரெவால் ஆகியோரின் மகளாவார்.