சீரகத்தை இந்த பொருட்களுடன் சேர்த்து சாப்பிடுங்க.! உடலுக்கு பல அற்புத நன்மைகள் கிடைக்குமாம்

சமையலில் முக்கியமாக பங்கு வகிக்கும் பொருட்களில் ஒன்று சீரகம். இது உணவுகளில் தனித்துவ சுவை மற்றும் நறுமணத்தை அளிக்க கூடியது.

சீரகத்தில் இரும்புச்சத்து, வைட்டமின் பி, வைட்டமின் ஈ புரதச்சத்து, நார்ச்சத்து, நிறைவுறு கொழுப்பு போன்றவை மிகுதியான அளவில் உள்ளன. இதில் பல்வேறு மருத்து குணங்கள் நிறைந்துள்ளது. இதனை ஒரு சில பொருட்களுடன் சேர்த்து சாப்பிட்டால் போதும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

அந்தவகையில் சீரகத்தை எதனுடன் சாப்பிடால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம்.

  • தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து சீரகக் குடிநீர் தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை நாள் முழுவதும் அவ்வப்போது பருகி வர எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது.
  • நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும் தன்மையும் இந்தச் சீரக நீருக்கு உண்டு. சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.
  • மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்லை நீங்கும். சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர பித்தம் மொத்தமாகக் குணமாகும்.
  • சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள்உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு கோளாறு ஏற்படாது தடுக்கும். எனவே வாரம் ஒருமுறை தடுப்பு முறையாகக் கூட இதைச் சாப்பிடலாம்.
  • உடலுக்கு குளிர்ச்சியும் தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு. எனவே தினம் உணவில் சீரகத்தை ஏதாவது ஒரு வழியில் சேர்த்துக் கொள்வோம்.
  • திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடியைச் சேர்த்து பருகினால் ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும்.
  • சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெய்யில் இட்டுக் காய்ச்சி அந்த எண்ணெய்யைத் தலையில் தேய்த்துக் குளித்தால் கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE