முன்னாள் அமைச்சர் போல் பெரேராவின் மகன் ரொட்னி பெரேராவை, ஜப்பானிய தூதுவராக நியமிக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜப்பானின் இலகு தொடரூந்து திட்டம் ரத்து செய்யப்பட்டமையை அடுத்து, தகர்ந்துப்போயுள்ள ஜப்பானுடனான ராஜதந்திர உறவை மேம்படுத்தும் வகையிலேயே இந்த நியமனம் அமைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
ஏற்கனவே டோக்கியோவுக்கான தூதுவராக கடற்படையின் முன்னாள் அதிகாரியும் வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளருமான, அட்மிரல் ஜயநாத் கொலம்பகே, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் பரிந்துரை செய்யப்பட்டிருந்தார்.
எனினும் ஜப்பானுடனான உறவை பலப்படுத்த, படையதிகாரி ஒருவரின் நியமனம் பொருத்தமற்றது என்ற அடிப்படையில், ரொட்னி பெரேராவின் பெயர், ரணில் விக்கிரமசிங்கவின் நிர்வாகத்தினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ரொட்னி பெரேரா ஏற்கனவே இலங்கையின் தூதுவராக வோஷிங்டனில் பணியாற்றினார்.