9ஆம் திகதி வன்முறை! மேலும் ஒருவர் கைது

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலீப் வெதஆராச்சியின் சகோதரர் நிஹால் வெதஆராச்சி கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்காலை கார்ல்டன் இல்லத்திற்கு அருகில் மே 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை தொடர்பில் தங்காலை காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறையின் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

நிஹால் வெதஆராச்சி தென் மாகாணசபையின் முன்னாள் உறுப்பினராவார்.

இதேவேளை, மே 9 மற்றும் ஜூலை 9 ஆகிய நாட்களில் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் மற்றும் அத்துமீறல்கள் தொடர்பில் தொடர்ந்தும் கைதாவோர் தொடர்பில் தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published.