
இலங்கை வீராங்கனை நெத்மி பொருதொட்டகே வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
இங்கிலாந்தில் இடம்பெற்றுவரும் 2022 பொதுநலவாய விளையாட்டு நிகழ்வில் 57 கிலோகிராம் எடைப்பிரிவில் மல்யுத்தம் போட்டியிலேயே அவர் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
அவுஸ்திரேலிய வீராங்கனையை 1 நிமிடம் 51 வினாடிகளில் வென்று அவர் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதற்கமைய, பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் இலங்கை 1 வெள்ளி 3 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.