பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் பதவியேற்றுக் கொண்டார்.
இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதம் சபாநாயகரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த கடிதம் தொடர்பில் இன்று விசேட அறிக்கை ஒன்றை விடுத்த சபாநாயகர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14 ஆம் திகதி முதல் தனது பதவியை சட்டப்பூர்வமாக இராஜினாமா செய்துள்ளதாக குறிப்பிட்டார்.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதம் இலங்கையில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தின் ஊடாக சபாநாயகருக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் சென்ற பின்னர் இது தொடர்பான கடிதத்தை அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.