இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார்!!

நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த ஸ்திரமற்ற சூழ்நிலையில் அடுத்து வரும் இரு வருட காலப்பகுதிக்கு சனாதிபதியாக வர யார் பொருத்தமானவர் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. அது தொடர்பாக பலரும் தங்களது தனிப்பட்ட கருத்துக்களைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இந்தநிலையில் அதற்கு முன்னர் ஒரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதியை எவ்வாறு பதவியிலிருந்து நீக்கலாம் மற்றும் அந்தப் பதவி வெற்றாக்கப்பட்டால் அந்த இடத்தை எவ்வாறு நிரப்பலாம் என்பன தொடர்பாக 1976ம் ஆண்டு அரசியலமைப்பு என்ன சொல்கின்றது என்று பார்ப்போம். இது பற்றி நாம் கட்டாயம் அறிந்திருக்க வேண்டியது ஒவ்வொரு குடிமனது கடமையும் ஆகும்.

சனாதிபதியின் பதவி வறிதாகல்
38. (1) சதிபதியின் பதவி பின்வரும் சூழ்நிலைகளில் வறிதாதல் வேண்டும் :

(அ) அவர் இறப்பதன்மேல்;
(ஆ) அவர், சபாநாயகருக்கு முகவரியிட்டனும் தம் கைப்பட்ட கடிதத்தின் மூலம் தமது பதவியைத் துறந்தால்;
(இ) அவர் இலங்கையின் ஒரு பிரசையாக இல்லாதொழித் தால்;
(ஈ) சனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்ட ஆள், தமது பதவி காலம் தொடங்கிய தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குள்ளாக வேண்டுமென்று பதவியேற்கத் தவறினால்;
(உ) அடுத்துப் பின்வரும் பந்தியில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளவாறாக அவர் பதவியினின்றும் அகற்றப்பட்டால்; அல்லது

(ஊ) 130 (அ) என்னும் உறுப்புரையின் கீழ உயர்நீதிமன்றம் அதன் தத்துவங்களைப் பிரயோகிக்கையில், அவர் சனாதி பதியாகத் தெரிவு செய்யப்பட்டமை வெற்றும் வறிதுமானதெனத் தீர்மானிப்பதுடன் வேறெவரேனும் ஆள் சனதிபதியாக முறையாகத் தெரிவுசெய்யப்பட்டாரெனத தீர்மானிக்காவிடில்.

(2)(அ) பாராளுமன்ற உறுப்பினரெவரும், சபாநாயகருக்கு முகவரியிட்டலுப்பும் கடிதத்தின் மூலம், மனப்பலவீனம் அல்லது உடற் பலவீனம் காரணமாகச் சனாதிபதி அவராக பதவிக்குரிய பணிகளை நிறைவேற்றுவதற்கு நிரந்தரமாக இயலாதுள்ளாரெனச் சார்த்துகின்ற, அல்லது சனாதிபதி, பின்வருவனவற்றைப் புரிந்ததற்குக் குற்றவாளியாகவுள்ளாரெனச் சார்த்துகின்ற தீர்மானம் பற்றிய அறிவித்தலொனறைக் கொடுக்கலாம்:

(i) அரசியலமைப்பினை வேண்டுமென்றே மீறிய குற்றம்,

(ii) தேசத்துரோகம் புரிந்த குற்றம்,

(iii) இலஞ்சம் பெற்ற குற்றம்,

(iv) தமறு பதவிக்குரிய அதிகாரங்களைத் துர்ப்பிரயோகம் செய்தமையை உள்ளடக்கிய துர்நடத்தைக்கான அல்லது ஊழலுக்கான குற்றம், அல்லது

( V ) ஒழுக்கக்கேட்டை உட்படுத்தும், ஏதேனும் சட்டத்தின்கீழான ஏதேனும் தவறு;

அத்துடன் சுமத்தப்பட்ட குற்றச்சார்த்தல் அல்லது குற்றச்சார்த்தல்கள் பற்றிய முழு விபரங்களையும் அத்தீர்மானம் தருதல் வேண்டுமென்பதுடன், உயர்நீதிமன்றத்தினால் அதன்மீது நடாத்தப்படுதல் வேண்ணுமெனவும், அறிக்கை சமர்ப்பிக்கப்படுத வேண்டுமெளவும் கோருதலும் வேண்டும்.
இவ்வாறே 38(2)(ஆ)(இ)(ஈ)(உ) உறுப்புரைகள் அதன் விபரங்களைக் கூறுகின்றன.

சனாதிபதி உரியமுறையில் தேர்ந்தெடுக்கப் படவில்லையென அல்லது சனாதிபதியின் தேர்தல் வறிதாகிவிட்ட தென உயர்நீதி மன்றத்தால் தீர்மானிக்கப்படல்.

39. (1) உயர்நீதிமன்றமானது, 130 ஆம் உறுப்புரையின் கீழான அதன் நியாயாதிக்கத்தைப் பிரயோகிக்கையில்

(அ ) சனாதிபதியின் தேர்தல் வறிதானதெனத் தீர்மானிக்கின்ற விடத்தும் வேறெவரேனும் ஆள் சனாதிபதியாக முறையாகத் தெரிவுசெய்யப்பட்டாரெனத் தீர்மானிக்காத விடத் தும், அத்தீர்மானத் தேதியிலிருந்து மூன்று மாதங் களுக்குப் பிந்தாமல், சனாதிபதியைத் தேர்ந்தெடுப்ப தற்கான வாக்கெடுப்பொன்று நடாத்தப்படுதல் வேண் டும்; அல்லது

(ஆ) வேறு எவரேனும் ஆள் சனாதிபதியாக உரியமுறையில் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று தீர்மானிக்கின்றவிடத்து, அத்தகைய வேறு ஆள், அத்தீர்மானத் தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குள் சனாதிபதிப் பதவியை ஏற்றல் வேண் டும்.
இவ்வாறு தொடர்கிறது…

இந்தநிலையில் சனாதிபதிப் பதவி வெற்றாகினால் அந்த இடத்தை நிரப்ப உடனடியான ஏற்பாடு அரசியலமைப்பில் எவ்வாறு உள்ளது என்பதேப் பார்ப்போம்!

வறிதாக்கலும், அடுத்துவரும் சனாதிபதியைத் தேர்ந்தெடுத்த லும்.

40. (1) (அ) சனாதிபதியின் பதவி அவரது பதவிக்காலம் சாதிபதி முடிவடைவதற்கு முன்பாக வறிதாகினால், பாராளுமன்றம், சனாதி என்ற பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்குத் தகைமையுடையவராயுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரைச் சனாதி பதியாகத் தேர்ந்தெடுத்தல் வேண்டும். சனாதிபதிப் பதவிக்கு அங்கனம் வருகின்ற ஆள் எவரும், பதவியை வறிதாக்கிச் செல்லும் சனாதிபதியின் பதவிக்காலத்தில் முடிவுறாதெஞ்சியுள்ள காலத்துக்கு மட்டுமே பதவி வகித்தல் வேண்டும்.

(ஆ) அத்தகைய தேர்தல், வெற்றிடம் ஏற்பட்ட பின்னர் இயன்றளவு விரைவாகவும், எச்சந்தர்ப்பத்திலும் அத்தேதியிலிருந்து ஒரு மாதத்துக்குப் பிந்தாமலும் நடாத்தப்படுதல் வேண்டும். பாராளுமன்றம் சட்டத்தினால் ஏற்பாடுசெய்யக்கூடியவாறான அத்த கைய நடவடிக்கைமுறைக்கிணங்க அத்தகைய தேர்தல், இரகசிய வாக்களிப்பு மூலமும் அளிக்கப்பட்ட வாக்குகளின் பூரணப் பெரும்பான்மை மூலமும் நடைபெறுதல் வேண்டும்:

ஆயின், அத்தகைய வெற்றிடம், பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் ஏற்பட்டால், சனாதிபதியானவர், புதிய பாராளு மன்றத்தின் முதலாவது கூட்டம் நடைபெற்ற தேதியிலிருந்து ஒரு மாத காலத்துள் பாராளுமன்றத்தினால் தேர்ந்தெடுக்கப்படுதல் வேண்டும்.

(இ) அத்தகைய வெற்றிடம் ஏற்பட்ட காலத்துக்கும் புதிய சனாதிபதி பதவி ஏற்கின்ற காலத்துக்கும் இடைப்பட்ட காலத்தின் போது, சனாதிபதிப் பதவியில் முதலமைச்சர் பதிற்கடமையாற்ற வேண்டும் என்பதுடன், முதலமைச்சர் என்ற பதவியில் பதிற் கடமையாற்றுவதற்கென அமைச்சரவையின் ஏனைய அமைச்சர் களுள் ஒருவரை முதலமைச்சர் நியமித்தலும் வேண்டும் :

ஆயின், அந்நேரத்தில் முதலமைச்சர் பதவி வறிதாயிருக்கு மெனின், அல்லது முதலமைச்சர் பதிற்கடமையாற்றுவதற்கு இயலாதவராக இருப்பாரெனின், சனாதிபதி என்ற பதவியில் சபாநாயகர் பதிற்கடமையாற்றுதல் வேண்டும்.

(2) சனாதிபதி பற்றிய அரசியலமைப்பின் ஏற்பாடுகள் (32 ஆம் உறுப்புரையின் (2) ஆம் பந்தியின் ஏற்பாடுகள் நீங்கலாக), அவற்றை ஏற்புடையதாக்கக்கூடிய அளவுக்கு, பதிற் சனாதிபதிக்கும் ஏற்புடையனவாதல் வேண்டும்.

(3) சனாதிபதியைப் பாராளுமன்றம் தேர்ந்தெடுத்தலுக்கான நடவடிக்கைமுறை பற்றிய எல்லாக் கருமங்களுக்கும், அவற்றுக்கு அவசியமான அல்லது அவற்றின் இடைநேர்விளைவான எனைய எல்லாக் கருமங்களுக்கும் சட்டத்தின்மூலம் பாராளுமன்றம் ஏற்பாடுசெய்தல் வேண்டும்.

இவ்வாறு

இலங்கை சனநாயக குடியரசின் அரசியலமைப்பு அத்தியாயம் VII இன் ஆட்சித்துறை குடியரசின் சனாதிபதி தொடர்பாகக் கூறுகின்றது.

நன்றி

சோமசூரியம் திருமாறன் (LLB) இலங்கை சட்டக் கல்லூரி மாணவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE