ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஷின் பயணத்தின்போது உக்ரேனின் கீயவ் மீதான ரஷ்யாவின் வான்வழி தாக்குதல், ‘மனிதாபிமானமற்றது’ என்று ஜெர்மனி விமர்சித்துள்ளது.
“கீயவ் மீதான ரஷ்ய ஏவுகணை தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். என்று அரசாங்க செய்தித் தொடர்பாளர் வொல்ப்காங் புச்னர் கூறினார்.
நேற்றிரவு கீயவைத் தாக்கியதை ரஷ்யா உறுதிப்படுத்தியுள்ளது, ஆனால், தங்களின் இலக்கு ராணுவம் என்றும் குறிப்பாக, ஏவுகணைகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை என்றும் தெரிவித்துள்ளது.