எரிபொருள் கொண்டு செல்லும் பவுசர்களுக்கு இடையூறு ஏற்படுத்தவோ அல்லது சேதத்தை ஏற்படுத்தவோ வேண்டாமென அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் சிரேஷ்ட ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
மேலும், அனைத்து எரிபொருள் பௌசர்கள் மற்றும் ரயில்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.