முகக்கவசம் அணிதல் கட்டாயமில்லை என்ற தீர்மானத்திற்கு விசேட வைத்தியர்கள் சங்கம் கண்டனம்!

பொது இடங்களில் முகக்கவசம் அணிதல் கட்டாயமில்லை என சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ள தீர்மானத்தை உடனடியாக ரத்து செய்யுமாறு விசேட வைத்தியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அந்த சங்கம் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

வெளி இடங்களில் இடம்பெறும் கூட்டங்களிலும் முகக்கவசம் அணிதல் கட்டாயமாக்கப்பட வேண்டும் என குறித்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

அத்துடன் கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு விசேட வைத்தியர்கள் சங்கம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

எவ்வாறாயினும் பொது போக்குவரத்து சேவைகள் மற்றும் உள்ளக நிகழ்வுகளில் தொடர்ந்தும் முகக்கவசம் அணிதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.