
சுகாதார காரணங்களுக்காக தமது வீசா அனுமதியை ரத்து செய்யும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் முடிவை சவாலுக்கு உட்படுத்தி முன்னணி டென்னிஸ் வீரர் நொவெக் ஜொகோவிச் தாக்கல் செய்த மேன்முறையீட்டு வழக்கு விசாரணை தோல்வி அடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த வழக்கில் நொவெக் ஜொகோவிச் தோல்வியுற்றதால், அவர் நாடு கடத்தப்படுவதோடு மூன்று ஆண்டுகள் அவுஸ்திரேலியாவுக்கான வீசாவை பெற்றுக்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.