பிரான்சில் தற்போது வரையில் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 59 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஒமிக்ரோன் தொற்றானது தற்போது உலகம் முழுவதும் மிக தீவிரமாக பரவி வருகிறது. இந்த நிலையில் இந்த தொற்றானது வேகமாக பரவி வந்தாலும் முந்தைய திரிபான டெல்டா தொற்றின் அளவுக்கு பாரிய ஆபத்தை ஏற்படுத்தாது என விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். இருப்பினும் இந்த தகவல்கள் முதற்கட்ட பரிசோதனையின் பெயரிலே தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிரான்சில் கடந்த நவம்பர் 30 ஆம் திகதி முதல் ஒமிக்ரோன் தொற்றானது கண்டறியப்பட்டது. தற்போது நேற்றைய நிலவரப்படி பிரான்சில் 59 பேர் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது.