நெத்திலி மீன் வறுவல்லா இப்படி இருக்கணும் ..!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் நெத்திலி மீன் வறுவலை எப்படி சுவையான முறையில் செய்வது என்பதை பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

நெத்திலி – 500 கிராம்

தேங்காய் எண்ணெய் – வறுக்கத் தேவையான அளவு

ஊற வைக்கத் தேவையான பொருட்கள்

எலுமிச்சை சாறு – 1 tsp

சிவப்பு மிளகாய் பொடி – 1 tsp

மஞ்சள் பொடி – 1/2 tsp

தனியா பொடி – 1 1/2 tsp

மிளகுப் பொடி – 1/2 tsp

வெந்தையப் பொடி – ஒரு சிட்டிகை

இஞ்சி இடித்தது – அரை துண்டு

பூண்டு இடித்தது – 4 பற்கள்

கறிவேப்பிலை – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை விளக்கம்

முதலில் மீனை நன்றாக சுத்தம் செய்துகொள்ளுங்கள். அடுத்து மேலே ஊற வைக்க நெத்திலியை சுத்தம் செய்து அதில் மேலே குறிப்பிட்ட மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, கான்ப்ளார், இஞ்சி, பூண்டு விழுது, அரிசி மாவு, மைதா, எலுமிச்சை சாறு, ஆகிய மசாலாக்களை அனைத்தும் கலந்து ஊற வைக்க வேண்டும்.

பின் சுத்தம் செய்து வைத்துள்ள மீனை அதில் பிரட்டிக்கொள்ளவும். அதை சிறிது நேரம் ஊற வைக்கவும்.
அடுத்து, கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு அது சூடானதும், ஊற வைத்துள்ள மீன் துண்டுகளைப் போடவும். மீன் பொன்னிறமாக வறும் வரை வறுக்கவும்.

அப்போதுதான் மொறு மொறுவென இருக்கும். அவ்வளவுதான் சுவையான நெத்திலி மீன் வறுவல் தயார்.!

Leave a Reply

Your email address will not be published.