இறாலில் இப்படி ஒரு சூப்பரான உணவு செய்து ருசிக்கலாம்…. 20 நிமிடத்தில் தயார்!

இறாலில் ஹெபாரின் என்ற பொருள் அடங்கியுள்ளதால் கண் பார்வை சிதைவிலிருந்து காக்கும்.

முக்கியமாக கணினி முன் நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்கு சிறந்தது. இறாலில் உள்ள கனிமங்கள் முடி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தசைகள் வலுவடையும்.

புரதம், கால்சியம்,பொட்டாசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால் எலும்பு சிதைவுகள் ஏற்படாமல் பாதுகாக்கும். உணவில் வாரம் ஒரு முறை இறாலை சேர்த்துக் கொண்டால், பல நோய்களுக்கு மருந்தாகும். இன்று இறால் முட்டை பொடிமாஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

இறால் – 100 கிராம்
முட்டை – 2
மிளகு தூள் – சிறிதளவு
உப்பு – அரை ஸ்பூன்
இஞ்சி, பூண்டு பேஸ்ட் – அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிது
மிளகாய் தூள் – சிறிதளவு
வெங்காயம் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
வெங்காயத்தாள் – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

முதலில் இறாலை சுத்தம் செய்து சிறிது மிளகாய் தூள், உப்பு, இஞ்சி, பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்துசுமார் அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் அதனை தோசை கல்லையில் போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும். வறுத்த இறாலை பொடியாக நறுக்கி கொள்ளவும். வெங்காயத்தாள், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.பின்னர் பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், வெங்காயத்தாள் போட்டு வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகு தூள், மிளகாய் தூள், கறிவேப்பிலை, உப்பு போட்டு வதக்கவும்.அடுத்ததாக அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறவும். முட்டை நன்றாக வெந்து உதிரி உதிரியாக வந்ததும் பொடியாக நறுக்கிய இறால், வெங்காயத்தாள் சேர்த்து நன்றாக கலந்து இறக்கி பரிமாறலாம். இப்போது சுவையான இறால் முட்டை பொடிமாஸ் ரெடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE