ஒருநாளைக்கு அதிகபட்சமாக 2 முட்டை போதுமானது. வேக வைத்து சாப்பிடுவது நல்லது.முட்டையை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது. குறிப்பாக அதன் மஞ்சள் கரு கொழுப்பைக் குறைத்து உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. எப்படி தெரியுமா..?
முட்டையின் மஞ்சள் கருவில் கோலின் உள்ளது. இது வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் எடை இழப்பை ஏற்படுத்துகிறது.
வெள்ளை மற்றும் மஞ்சள் கரு என முழு முட்டையை நீங்கள் காலை உணவாக எடுத்துகொண்டால் உங்களுக்கு பசி எடுக்க நீண்ட நேரம் ஆகும். வயிறும் நிறைவாக இருக்கும் உணர்வு தோன்றும்.
இதனால் நீங்கள் அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க முடியும். வைட்டமின்-பி மற்றும் அமினோ அமிலங்கள் மூளை ஆரோக்கியத்திற்கு ஊட்டமளிக்கிறது.
முட்டை நல்ல கொழுப்பின் அளவை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது. அடிப்படையில், நம் உடலுக்கு சூரியக் கதிர்களிடமிருந்து வைட்டமின்-டி சத்துக் கிடைக்கிறது. ஆனால் உணவு என்று பார்த்தால் வைட்டமின் டி சத்து கொண்ட உணவுகள் மிகக் குறைவு.
அதில் அரிதான வைட்டமின்- டி சத்து கொண்ட உணவுதான் முட்டை மஞ்சள் கரு. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும் சிறந்தது.
முட்டை நல்லதுதானே என்பதற்காக அளவுக்கு அதிகமாக சாப்பிடாதீர்கள். ஒருநாளைக்கு அதிகபட்சமாக 2 முட்டை போதுமானது. வேக வைத்து சாப்பிடுவது நல்லது.