Healthy liver: கல்லீரலை ஆரோக்கியமாக வைக்க உதவும் உணவுகள்

உடலின் அனைத்து உறுப்புகளும் ஆரோக்கியமாக இருந்தால் தான் வாழ்க்கை வசந்தமாக இருக்கும். இல்லையென்றால் நோயற்ற வாழ்வு வாழ முடியாது. உடல் உறுப்புகளில் கல்லீரல் மிக முக்கியமான ஒன்றாகும்.

சாப்பிடுவதை செரிமாணம் செய்ய உதவும் கல்லீரல், ஊட்டச்சத்து உட்கொள்ளலை சமநிலைப்படுத்தவும், குளுக்கோஸை ஆற்றலாக மாற்றவும், ரத்தத்தில் இருந்து நச்சுப் பொருட்களை அகற்றவும் செயல்படுகிறது.

கல்லீரல் செயலிழந்தால் பல நோய்கள் நம்மைத் தாக்கும். அதனால்தான் கல்லீரலின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு உதவும் உணவுகளில் சில இவைதான். எளிதில் கிடைக்கும் விலை மலிவான இந்த உணவு பொருட்கள் உங்கள் கல்லீரலின் தரத்தை சிறப்பாக பராமரிக்க உதவும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். விட்டமின் சி கல்லீரலை சுத்தமாக வைத்திருக்கும். எலுமிச்சையில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. எலுமிச்சையில் உள்ள கூறுகள் கல்லீரல் செல்களின் ஆற்றலை அதிகரிக்கின்றன. செரிமானத்தை ஆதரிக்கும் நொதிகளை கல்லீரலில் உற்பத்தி செய்ய உதவும் எலுமிச்சை, தாதுக்களை உறிஞ்சுவதையும் ஊக்குவிக்கிறது. எலுமிச்சை சாறு குடிப்பது பலவிதங்களில் நன்மை பயக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE