சப்ஜா விதைகள் உடல் பருமனை குறைக்க உதவுமா ?

திருநீற்று பச்சிலை என சொல்லக்கூடிய மூலிகை செடியின் விதைதான் இந்த ச‌ப்ஜா விதைகள், இந்த விதைகளை நீரில் ஊறவைத்து பின்னர் உட்கொள்வதனால் பல நன்மைகள் கிடைப்பதாக சொல்லப்படுகின்றது.

இதில் மினரல்ஸ், சுண்ணம்பு சத்து, பாஸ்பரஸ், மெக்னிசியம், வைட்டமின் ஏ, பி, இ, கே ஆகிய சத்துக்களை கொண்டுள்ளது.

இதில் உள்ள வைட்டமின் கே, உடல் எடையை சமமாக பராமரிப்பதற்கு மிக முக்கிய சத்தாக கருதப்படுகிறது. அந்தவகையில் இதனை எப்படி உடல் எடையை குறைக்க எடுத்து கொள்ளலாம் என்பதை இங்கே பார்ப்போம்.

உடல் எடையை குறைக்க சப்ஜா விதைகளை எப்படி சாப்பிடலாம்?

இரண்டு டேபிள் ஸ்பூன் சப்ஜா விதைகளை வெதுவெதுப்பான நீரில்15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.

நீரில் போட்டவுடன் சப்ஜா விதைகள் உரு மாற்றத்தை அடையும். பின்னர் உங்களுக்கு பிடித்தமான வகையில், சாலட், சூப், எலுமிச்சை ஜூஸ் என எதில் வேண்டுமானாலும் கலந்து சாப்பிடலாம்.

எப்படி உதவுகின்றது?

சப்ஜா விதைகளை சாப்பிடுவதானல் நீண்ட நேரம் பசி உணர்வின்றி இருக்க முடியும். இதனால் அடிக்கடி நொறுக்குத்தீணிகளை சாப்பிடுவதனால் உண்டாகும் உடல் பருமனை கட்டுக்குள் வைக்க இயலும்.

சப்ஜா விதைகளில் ஒமேகா3 அமிலம் அதிக அளவில் இருப்பதால் உடலுக்கு தேவையான மெட்டபாலிச அளவை அதிகரித்து, உடலில் சேர்ந்துள்ள கொழுப்புகளை கரைக்க உதவுகிறது

யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?

  • சப்ஜா விதைகள் நீரில் முழுமையாக கரையாது என்பதனால் குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும். இது சிறு குழந்தைகளின் தொண்டையில் அடைத்துக்கொள்ளும் வாய்ப்பு அதிகம்.
  • கர்ப்ப காலத்தில் பெண்கள் சப்ஜா விதைகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும், ஏனென்றால் இந்த விதைகள் பெண்களின் வளர்சிதை மாற்றத்திற்கு காரணமான ஈத்திரோசன் அளவை குறைக்கும் தன்மை கொண்டவை. எனவே கர்ப்ப காலத்தில் சப்ஜா விதைகளை சாப்பிடாமலிருப்பது நல்லது.
  • உடலில் வேறு ஏதேனும் உபாதைகள் அல்லது நோய்க்கு மருந்து சாப்பிட்டு வரும் நபர்கள் கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனைக்கு பின்னரே, சப்ஜா விதைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE