நெஞ்சை கலங்கடிக்கும் ஒற்றை புகைப்படம்

சிரியா போரின் துயரத்தை எடுத்துரைக்கும் ஒற்றை புகைப்படம் வைரலாகி வருகிறது.

சிரியாவில் நடந்த உள்நாட்டு போரால் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளிநாடுகளில் தஞ்சமடைந்தனர். உறவுகளை இழந்து வாடும் நெஞ்சங்கள், உடல் உறுப்புகளை இழந்து வாடும் மக்கள் என இவர்களின் துயரம் நீண்டு கொண்டே செல்கிறது.

அந்த வகையில் போரில் தன்னுடைய ஒரு காலை இழந்த தந்தை, ஊன்றுகோலை பிடித்தபடி தன்னுடைய குழந்தையை தூக்கி கொஞ்சுகிறார். குழந்தையும் தந்தையை பார்த்து புன்னகைக்கிறது, இதனை புகைப்படமாக எடுத்த துருக்கி நாட்டைச் சேர்ந்த புகைப்படக்காரர் மெஹ்மத் அஸ்லானிற்கு சிறந்த புகைப்படத்திற்கான விருது வழங்கப்பட்டுள்ளது. தந்தையின் பெயர் முன்சிர் என்பதும், மகனின் பெயர் முஸ்தஃபா என்பதும் தெரியவந்துள்ளது, அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள முஸ்தபா கை, கால்கள் இல்லாமல் பிறந்தது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் தங்களது மகனுக்கு மருத்துவ உதவிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர் முஸ்தபாவின் பெற்றோர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE