ரொறன்ரோவில் திங்கட்கிழமை முழுவதும் 15 முதல் 30 மி.மீ வரை மழை பெய்யும் என கனடா சுற்றுச்சூழல் சிறப்பு வானிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இன்று மாலையில் மழை குறைவதால், மொத்த மழை அளவு 30 முதல் 50 மி.மீ வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படும், மேலும் சில நேரங்களில் கனமழை பெய்யும் என்று பெடரல் வானிலை நிறுவனம் தெரிவித்துள்ளது. ரொறன்ரோவில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருக்க வாய்ப்புள்ளதாக கனடா சுற்றுச்சூழல் எச்சரித்துள்ளது. அவ்வாறு வெள்ளம் ஏற்பட்டால், வெள்ளத்தைக் குறைக்க, புயல் வடிகால்களில் இலைகள் மற்றும் குப்பைகள் இல்லாமல் இருப்பதை குடியிருப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று பெடரல் வானிலை நிறுவனம் கூறியுள்ளது. திங்கட்கிழமை தெற்கு ஒன்ராறியோ முழுவதும் வடகிழக்கு திசையில் இருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இந்த மழை பெய்துள்ளதாக கனடா சுற்றுச்சூழல் தெரிவித்துள்ளது.