துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களுக்குப் பின்னர் இதுவரை 14,000 க்கும் மேற்பட்டோர் இறந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக துருக்கி அதிபர் Recep Tayyip Erdogan தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 63,000-க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.
மேலும், நிலநடுக்கத்தின் விளைவாக 6,400 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்துள்ளன.
சிரியாவில் குறைந்தது 3,162 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன் விளைவாக, மொத்தம் 17,100 பேர் இறந்துள்ளனர்.
உலக சுகாதார அமைப்பின் (WHO) கருத்துப்படி இறப்பு எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருப்பதாக அச்சம் தெரிவித்துள்ளது. மற்றும் சுமார் 20,000 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று மதிப்பிடுகிறது.