துருக்கியிலும்,சிரியாவிலும் பிப்ரவரி 6 ஆம் நாளன்று 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. முதல் நிலநடுக்கத்தில் 2,300 பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டது.
அந்த மிகப்பெரும் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இதுவரை துருக்கி மற்றும் சிரியாவில் 243 பின்அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. அதிக அளவு நிலநடுக்கங்களால் மக்கள் வீடுகளில் இருக்க பயப்படுகிறார்கள், அதே நேரத்தில் குளிரான காலநிலை காரணமாக மக்கள் வெளியில் செல்லவும் முடியாது தவிக்கிறார்கள்.
இரு நாடுகளின் புள்ளிவிவரங்களின்படி, நிலநடுக்கத்தில் இதுவரை 4,890 பேர் உயிரிழந்துள்ளனர்.