உயிரை பணயம் வைத்து உக்ரைன் செல்லும் மாணவர்கள்

மருத்துவ படிப்பை முடிக்க, உயிரை பணயம் வைத்து இந்திய மாணவர்கள் உக்ரைன் செல்கின்றனர். கிழக்கு ஐரோப்பிய நாடன உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நிலையில், அங்கு பல்வேறு இடங்களில் மருத்துவம் பயின்று வந்த இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர்.

போர் துவங்கி ஆறு மாதங்களுக்கு மேலாகிய நிலையிலும், உக்ரைன் நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து ரஷ்ய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆன்லைன் வாயிலாக மருத்துவம் படிப்பது செல்லாது என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து கடுமையான போர்ச் சூழலுக்கு மத்தியிலும்,தற்போது மீண்டும் மருத்துவ படிப்பை தொடர, மாணவர்கள் உயிரை பணயம் வைத்து உக்ரைன் செல்கின்றனர்.

இதுகுறித்து கேரளாவைச் சேர்ந்த மாணவர்கள் கூறியதாவது: உக்ரைனில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் 5-ம் ஆண்டு படித்து வருகிறேன். எனக்கு இன்னும் ஆறு மாத காலம்தான் வகுப்பு உள்ளது. போர் காரணமாக இந்தியா திரும்பினேன்.

தற்போது மீண்டும் அழைப்பு வந்ததால், மூன்று வாரத்திற்கு முன் சுற்றுலா விசா மூலமாக திருவனந்தபுரத்தில் இருந்து விமானத்தில் வாயிலாக துபாய் சென்று, அங்கிருந்து மால்டோவா சென்றேன். பின் அங்கிருந்து பஸ்சில் 300 கி.மீ., பயணித்து பல்கலைக்கு வந்தேன். இங்கு விடுதியில் தங்கியுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.