சீனாவுக்கு ‘யுவான்’ வாயிலாக கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்ய மேற்காசிய நாடான சவுதி அரேபியா முடிவு செய்துள்ளது. இதனால், சர்வதேச அளவில் டொலருக்கான முக்கியத்துவம் குறைந்தவிடும் என்பதால், அமெரிக்கா கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
தற்போது உலகெங்கும் நடக்கும் வர்த்தகங்களில் பெரும்பாலும், அமெரிக்காவின் டொலரின் அடிப்படையிலேயே செய்யப்படுகின்றன. அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா இடையே நீண்ட காலமாக நல்ல உறவு இருந்து வந்துள்ளது.ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பதவியேற்ற பின், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் கச்சா எண்ணெயை, சீன யுவானிலேயே பரிவர்த்தனை செய்ய சவுதி அரேபியா முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பேச்சு நடந்து வருகிறது.சவுதி அரேபியாவின் மொத்த எண்ணெய் ஏற்றுமதியில், 25 சதவீதம் சீனாவுக்கே செல்கிறது. இத்தனை ஆண்டுகளாக டொலரின் அடிப்படையில் பரிவர்த்தனை நடந்து வந்த நிலையில், அதை கைவிட சவுதி அரேபியா முன்வந்துள்ளது, அமெரிக்காவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.