கொரோனா தடுப்பு மருந்து செலுத்திக்கொள்ள மாட்டேன் என கட்டாயமாகக் கூறிய நோயாளி ஒருவருக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய அமெரிக்க மருத்துவமனை மறுப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கம் காரணமாக 8 லட்சத்து 72 ஆயிரம் பேர் மரணமடைந்துள்ளனர். இதுவரை 6 கோடி பேர் வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களில் 62 சதவீத குடிமக்கள் இரண்டு டோஸ் தடுப்பு மருந்தை பெற்றுள்ளனர்.
இந்நிலையில் நாள்பட்ட நோய் கொண்டவர்கள் மற்றும் முக்கிய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு அமெரிக்காவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் தடுப்பு மருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும் என்று சிடிசி முன்னதாக உத்தரவிட்டிருந்தது. ஆனால் தடுப்பு மருந்து தொடர்பான மூட நம்பிக்கையால் சிலர் இவற்றை செலுத்தத் தயங்கி வருகின்றனர். இதனால் பாஸ்டனில் ஒரு நோயாளிக்கு ஏற்பட்ட பின்விளைவு விபரீதமாகி உள்ளது.