சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சியில் 27 வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். மானாமதுரை நகராட்சியில் ஆண் வாக்காளர்கள் 12,444 பேர்; பெண் வாக்காளர்கள் 13,100 பேர் உள்ளனர். 27- வது வார்டில் குறைந்தபட்சமாக 345 வாக்காளர்களும், அதிகபட்சமாக 23- வது வார்டில் 1,187 வாக்காளர்களும் உள்ளனர். தேர்தல் நடத்தும் அலுவலராக ஆணையாளர் கண்ணன் நியமிக்கப்பட்டார்.