கொழும்பு குளங்களில் மனிதர்களை உண்ணும் மீன்கள்: வெளியான அதிர்ச்சித் தகவல்!

மனிதர்களை உண்ணும் மீன் இனம் கொழும்பு குளங்களில் உள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த தகவலை வனஜீவராசிகள் திணைக்களத்தின் உற்பத்தி பிரிவின் சிரேஷ்ட ஆய்வாளர் அஜித் குமார தெரிவித்தார்.

மனிதர்களை உட்கொள்ளும் “பிரன்ஹா” எனப்படும் மிக ஆபத்தான மீன் வகைகளே இவ்வாறு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

\

பிரன்ஹா என்ற இந்த வகை மீன்கள் நாடளுமன்ற அமைந்துள்ள தியவன்னா ஓயா,களனி கங்கை மற்றும் பொல்கொட குளம் ஆகியவற்றில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த பகுதிகளில் மீன் வளர்ப்பிற்கு மீன் குஞ்சிகள் விடப்பட்டபோது இந்த வகை இனத்தை சேர்ந்த மீன் கலந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட மீன்கள் ஊடாக இந்த அபாய மீன்களும் இலங்கைக்குள் வந்திருக்கலாம் அல்லது வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்களின் போது குறித்த மீன்கள் வந்திருக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE