சிக்கலில் ஹார்திக் பாண்டியா: கோடிகளில் வாட்ச் வாங்கி கஸ்டம்சிடம் மாட்டினார்

ஹார்திக் விலை உயர்ந்த கடிகாரங்களை மிகவும் விரும்புபவர் என்பது அனைவருக்கும் தெரியும். சில மாதங்களுக்கு முன், 5 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள Patek Philippe Nautilus Platinum 5711 கடிகாரத்தை அவர் வாங்கியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹார்திக் பாண்டியா, மிகக் குறுகிய காலத்தில் தனது கேரியரில் சாதனை படைத்துள்ளார். ஆடம்பர வாழ்க்கைக்கு பெயர் பெற்றவர் ஹார்திக் பாண்டியா. ஹார்திக் பாண்டியா மிகக் குறுகிய காலத்தில் உலக கிரிக்கெட்டில் ஏராளமான செல்வத்தையும் புகழையும் அடைந்துள்ளார்.

ஹார்திக் பாண்டியாவின் 5 கோடி மதிப்புள்ள இரண்டு கைக்கடிகாரங்களை சுங்கத்துறை பறிமுதல் செய்துள்ளதாக பெரும் செய்தி வெளியாகியுள்ளது.

 

5 கோடி மதிப்புள்ள ஹார்திக் பாண்டியாவின் கைக்கடிகாரத்தை சுங்கத்துறை பறிமுதல் செய்தது

ஹார்திக் பாண்டியாவின் கைக்கடிகாரத்தின் விலையை கேட்டால் நீங்களும் ஆச்சரியப்படுவீர்கள்!! ஹார்திக் பாண்டியாவின் (Hardik Pandya) இந்த 2 கைக்கடிகாரங்களின் விலை ரூ.5 கோடி ஆகும்.

ஹார்திக்கின் இந்த 2 கைக்கடிகாரங்களும் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு, தேர்வாளர்கள் அவரை இந்திய அணியில் இருந்து நீக்கினர்.

டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து மும்பை திரும்பிய ஹார்திக் பாண்டியாவின் இரண்டு கைக்கடிகாரங்கள் சுங்கத் துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இப்போது தகவல் வெளியாகியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE