டி20 உலகக் கோப்பை செய்தியாளர் சந்திப்பின் போது ரொனால்டோவை போல் வார்னரும் கோகோ கோலா குளிர்பான பாட்டிலை மேசையிலிருந்து எடுத்துவிட்டு பிறகு மீண்டும் வைத்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
2020 யூரோ காலந்து தொடரின் போது போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டினா ரொனால்டோ செய்தியாளர் சந்திப்பின்போது கோகோ – கோலா குளிர்பான பாட்டிலை மேசையிலிருந்து நகர்த்திய செயலால் அந்நிறுவனத்துக்கு சுமார் 5.2 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டது.
ரொனால்டோவை தொடர்ந்து வீரர்கள் பலர் கோகோ கோலா குளிர்பான பாட்டிலை மேசையிலிருந்து நீக்கினர்.
எனினும், கோகோ கோலா-UEFA இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதால் கால்பந்து வீரர்கள் இனி இதுபோன்ற செயல்களை தொடரக்கூடாது என யூரோ ஏற்பாட்டாளர்கள் வலியுறுத்தினர். அதேசமயம், டி20 உலகக் கோப்பையின் ஸ்பான்சராகவும் கோகோ கோலா நிறுவனம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நேற்று இலங்கைக்கு எதிரான வெற்றிக்கு பின் செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்ட ஆஸ்திரேலிய நட்சத்திரம் டேவிட் வார்னர், ரொனால்டோவை போலவே மேசையிலிருந்து கோகோ கோலா குளிர்பான பாட்டிலை எடுத்துவிட்டார்.பின் அங்கிருந்த ஊழியர்களிடம் இதை நான் எடுத்துவிடட்டுமா? என கேட்டார். ஆனால், அவர்கள் மீண்டும் பாட்டிலை வைக்குமாறு கோரினர். இது ரொனால்டோவுக்கு நல்லது என்றால், எனக்கும் நல்லது தான் என கூறிய வார்னர், பாட்டிலை எடுத்த இடத்திலேயே வைத்தார். குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.