கொரோனா காலகட்டத்திலும் புலம்பெயர்தல் அதிக அளவில் பாதிக்கப்படாத நாடு இதுதான்

கொரோனாவின் காரணமாக 2020ஆம் ஆண்டில், Organisation for Economic Co-operation and Development (OECD) என்ற அமைப்பின் கீழ் வரும் பணக்கார நாடுகளுக்கு மக்கள் புலம்பெயர்வது கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளது.

மற்ற OECD நாடுகளில் புகலிடம் கோருவோரின் எண்ணிக்கை சராசரியாக 31 சதவிகிதம் குறைந்துள்ள நிலையில், சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, 2020இல் புதிதாக புகலிடம் கோருபவர்களின் எண்ணிக்கை 22.5 சதவிகிதம் மட்டுமே குறைந்துள்ளதாக OECD அமைப்பின் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

மற்ற நாடுகளை விட சுவிட்சர்லாந்தில் குறைந்த அளவிலேயே இந்த எண்ணிக்கை அமைந்துள்ளதற்கு காரணம், சுவிட்சர்லாந்தின் தடையில்லாப் போக்குவரத்து ஆகும். சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்வோரில் பெரும்பான்மையோர் இந்த தடையில்லாப் போக்குவரத்தின் காரணமாகத்தான் புலம்பெயர்கிறார்கள் என்கிறார் OECD புலம்பெயர்தல் நிபுணரான Thomas Liebig.

சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயரும் பலர் ஐரோப்பா அல்லது அக்கம்பக்கத்து நாடுகளிலிருந்துதான் வருகிறார்கள். அவர்களில் சிலர் மிக உயர்ந்த கல்வித்தகுதி கொண்டவர்கள் என்கிறார் அவர்.இந்த வெளிநாட்டவர்கள் சுவிட்சர்லாந்தின் பட்ஜெட்டில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள் என்று கூறும் Liebig, புலம்பெயர்ந்தோர், சுவிட்சர்லாந்தில் பிறந்தவர்களை விட 15 சதவிகிதம் அதிகமாக, தாங்கள் பெறும் உதவிகளை விட அதிகம் தாங்கள் புலம்பெயர்ந்த நாட்டுக்குப் பங்களிக்கிறார்கள் என்கிறார்.

அதாவது, மருத்துவம், கல்வி மற்றும் சமூக பாதுகாப்புக்காக அரசு அவர்களுக்கு அளிக்கும் நிதி உதவியை விட, அவர்கள் நாட்டுக்கு அதிக அளவில் வரிகள் முதலானவற்றின் வாயிலாக திருப்பிக்கொடுக்கிறார்களாம்.

இந்த கொரோனா காலகட்டத்தில் புலம்பெயர்தல் குறைந்துள்ள நிலையில், மீண்டும் புலம்பெயர்தல் அதிகரிக்கும் என நிபுணர்கள் கணிக்கிறார்கள். ஆகவே, புலம்பெயர்வோர் நாட்டுடன் ஒருங்கிணைந்து வாழ்வதை மேம்படுத்தும் வகையில், அவர்கள் தொழிலாளர் சந்தை மற்றும் சமுதாயத்தில் எதிர்கொள்ளும் தடைகளை அரசுகள் கருத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும் என்கிறார் Liebig.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE