கடந்த ஒக்டோபர் ஏழாம் நாளன்று இஸ்ரேலுக்கு எதிராக ஹாமாஸ்(Hamas) மிக பெரிய ரொக்கட் தாக்குதலை நடத்தியுள்ளது. ஹாமாஸ் படை வீரர்களும் அந்நாட்டுக்குள் புகுந்துள்ளனர். ஹாமாஸ் இத்தாக்குதலை «al-Aqsa Flood» என்று பெயரிட்டுள்ளனர். தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டும் பலர் காயமடைந்தும் உள்ளனர்.
இஸ்ரேல் இப்போது எதிர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. நாடு யுத்த சூழ்நிலையில் இருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் அறிவித்துள்ளார். இஸ்ரேலில் குறைந்தபட்சம் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் மற்றும் பல நூறு பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய பதில் தாக்குதலில் இரண்டு பாலஸ்தீன இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.
ஹமாஸின் தாக்குதல்களை நோர்வே கடுமையாக கண்டிப்பதாக அறிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேலிய குடிமக்கள் மீதான தாக்குதல்களை நோர்வே கடுமையாக கண்டிக்கிறது. தாக்குதல்கள் மற்றும் வன்முறைச் செயல்களை உடனடியாக நிறுத்துமாறு அழைப்பு விடுக்கிறது என்று வெளியுறவு அமைச்சர் Anniken Huidtfeldt NRK செய்தி ஊடகத்துக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதேவேளை யுத்த பிரதேசத்தில் பல நோர்வே நாட்டு மக்கள் வாழ்வதனால், அவர்கள் உள்ளூர் அதிகாரிகளின் அறிவுரைகளைக் கேட்டுப் பின்பற்றவும், அவர்களின் நிலைமையைப் பற்றி வீட்டில் அவர்களுக்குத் தெரிவிக்கவும் அப்பகுதியில் உள்ள நோர்வே மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும், வெளியுறவு அமைச்சகம் அப்பகுதியில் உள்ள நோர்வேஜியர்களை Reiseklar செயலியில் அல்லது reiseregistrering.no இல் பதிவு செய்ய வேண்டுமென பணித்துள்ளது.