
பின்லாந்து பிரதமர் சன்னா மரின், 36, தன் தோழியருடன் பங்கேற்ற ‘பார்ட்டி வீடியோ’ வெளியான நிலையில, தான் போதைப்பொருள் எடுத்துக் கொள்ளவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.
இருப்பினும், அவர் போதைப்பொருள் உட்கொண்டாரா என்பதற்கான பரிசோதனை நடந்தது. சன்னா மரின் 2019-ல் தன் 34 வயதில் பின்லாந்தின் பிரதமராக பதவியேற்றதன் வாயிலாக, உலகின் இள வயது பிரதமர் என்ற பெருமையை பெற்றவர். சமீபத்தில் அவர் தன் தோழியருடன், பார்ட்டி ஒன்றில் பங்கேற்று குத்தாட்டம் போட்டார்.
அவர் உற்சாகமாக பாடி, நடனம் ஆடும் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து சர்ச்சை கிளம்பியது. வீடியோவை பார்த்த பலரும், சன்னா போதைப்பொருள் பயன்படுத்தி இருப்பதாக குற்றம் சுமத்தினர். இதையடுத்து, சன்னா மரின் அந்த வீடியோவுக்கு விளக்கம் அளித்துள்ளார். அதில், ”நான், என் தோழியருடன் பார்ட்டியில் பங்கேற்று நடனம் ஆடினேன்; பாட்டு பாடினேன்.”ஆனால், போதைப்பொருள் எதையும் பயன்படுத்தவில்லை.
நான் சட்டத்துக்கு உட்பட்ட விஷயங்களைத் தான் செய்தேன்,” என தெரிவித்தார்.இருப்பினும், அவர் போதைப்பொருள் உட்கொண்டாரா என்பதற்கான பரிசோதனை நடந்தது.