2,500 பேர் அமெரிக்காவில் பகவத் கீதை பாராயணம்

டெக்சாஸ் மாகாணம், டல்லாஸ் நகரில் சுமார் 2 ஆயிரத்து 500 பேர் பங்கேற்ற பகவத் கீதை பாராயணம் நடைபெற்றது.

ஸ்ரீ அவதூத தத்தா பீடம் சார்பில் ஸ்ரீ கணபதி சச்சிதானந்தா இந்த பகவத் கீதை விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார். ஒரு வாரம் நடைபெற்ற இந்த விழாவில் பகவத் கீதை முழுமையாக அனைவராலும் பாராயணம் செய்யப்பட்டது.

வரலாற்று புகழ் பெற்ற இந்த கீதை சகஸ்ரகலா நிகழ்வில் ஆயிரத்து 500 சிறுவர், சிறுமியர் ஒரு வருடம் பயிற்சி செய்து மனப்பாடமாக கீதை பாராயணம் செய்தனர். இவர்களுடன் பார்வையளர்களாக வந்திருந்த ஆயிரம் பேர் பாராயணத்தில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் சுமார் 7 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE