காதுகள் பத்திரம் : அஜித் அறிவுரை

நடிகர் அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் தனது 61வது படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விசாகப்பட்டிணத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் அஜித் கூறிய அறிவுரை ஒன்று வைரலாகி உள்ளது. இதுதொடர்பாக அஜித்தின் மேலாளர், அஜித் கூறியதாக ஒரு பதிவை போட்டுள்ளார்.

அதில், ‛‛உங்களை காதுகளை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ளுங்கள்” என அறிவுரை கூறியுள்ளார். மேலும் காதுகளில் அடிக்கடி சத்தம் ஒலித்துக் கொண்டிருந்தால் அது காது கேட்கும் திறனை இழக்கும் சூழலுக்கு வழிவகுக்கும் என ஒரு விளக்கத்தையும் கொடுத்துள்ளார். அஜித்தின் இந்த சமூகப்பதிவு வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE