ஜனாதிபதி இலங்கையில் இல்லை அவ்வளவுதான் – பதில் கூறமறுத்த சபாநாயகர்

 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது இலங்கையில் இல்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பிபிசி செய்தி சேவைக்கு பேட்டியளித்த சபாநாயகர், இதனை உறுதி செய்துள்ளார். ஜனாதிபதி தற்போது இலங்கைக்கு அண்மித்த இடத்தில் தங்கியுள்ளதாகவும் அவர் எதிர்வரும் புதன்கிழமைக்குள் அவர் நாடு திரும்புவார் எனவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார் .

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடற்படையின் கப்பலில் இருந்ததை உயர் பாதுகாப்பு அதிகாரி தங்களுக்கு உறுதிப்படுத்தியதாக பிபிசி இணையத்தளம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி இந்தியா சென்றாரா என்று சபாநாயகரிடம் பிபிசி செய்தியாளர் கேட்டதற்குப் பதிலளித்த சபாநாயகர், பாதுகாப்புக் காரணங்களுக்காக இது தொடர்பில் மேலும் எதனையும் தெளிவுபடுத்தவும் குறிப்பிடவும் முடியாது என தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE