ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அரசாங்கமும் ஜூலை 13 ஆம் திகதி பதவி விலகாவிட்டால் நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் என தொழிற்சங்கம்கள் எச்சரித்துள்ளன.
அதன்படி ஜனாதிபதி பதவி விலகாவிட்டால் நாடு முழுவதும் 14 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் என அந்த அமைப்பின் இணை அழைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அவ்வாறு அனுஸ்டிக்கப்பட்டால் வைத்தியசாலைகள், துறைமுகங்கள், வங்கிகள், போக்குவரத்து ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.