எரிக்கப்பட்ட ரணில் வீடு – வெளியான முக்கிய தகவல்!

தலைநகர் கொழும்பில் இருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சொந்தமான பழங்கால பொருட்கள் கொண்ட வீட்டிற்கு போராட்டக்காரர்கள் போல் மாறுவேடமிட்ட நாசகாரர்கள் குழுவொன்று தீ வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, தனக்குப் பின்னர் கொழும்பு றோயல் கல்லூரிக்கு இந்த வீட்டை நன்கொடையாக வழங்குவதற்கான கடைசி உயிலையும் பிரதமர் வெளியிட்டுள்ளார்.

பிரதமர் ரணிலின் பாரம்பரிய வீட்டில் மிகப்பெரிய நூலகம் அமைந்திருந்ததது. இங்கு பொருட்களை விட அதிகளவிலான நூல்களே காணப்பட்டுள்ளன.

இந்த நூலகத்தில் நாட்டில் எங்கும் கிடைக்காத அரிய புத்தகங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையிலேயே அதிக தடவைகள் பிரதமர் பதவியை வகித்தவர் ரணில் விக்கிரமசிங்க என்ற போதிலும், பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமாக இருந்த கொழும்பு அலரி மாளிகைக்கு அவர் ஒருபோதும் இடம் பெயர்ந்ததில்லை.

உத்தியோகபூர்வ பணிகளுக்காக அலரி மாளிகைக்கு சென்றாலும், இந்த வீட்டிலேயே தனது வாழ்க்கையைக் கழித்தார்.

பிரதமர் மற்றும் அவரது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்கவும் இந்த வீட்டில்தான் தனது வாழ்நாளைக் கழித்தார்கள்.

இந்த வீடு பிரதமரால் மரபுரிமையாக பெறப்பட்டு பழைய கட்டடக்கலைப்படி நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE