பிரதமரின் ஊடகப் பிரிவு வெளியிட்ட தகவல்!

ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டிற்குள் புகுந்து தீ வைத்து எரித்ததாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு மரபுரிமையாகக் கிடைத்த இந்த வீட்டில் உள்ள பொருட்களில் பெரும்பாலானவை புத்தகங்களே என பிரதமர் அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

நவீன பொருட்கள் எதுவும் இல்லை என்றும் பழைய தளபாடங்கள் மட்டுமே இருப்பதாகவும் பேச்சாளர் குறிப்பிட்டார். வீட்டில் பொருத்தப்பட்டிருந்த ஓடுகள் கூட நவீனமானவை அல்ல என்றும் ஒரு வகை பழைய களிமண் ஓடுகள் என்றும் கூறப்படுகிறது.

அலரி மாளிகை என்பது பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமாக இருந்தது, ஆனால் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்ற போது அலரி மாளிகைக்கு செல்லவே இல்லை, கொழும்பு ஐந்தாவது லேனில் அமைந்துள்ள இந்த வீட்டில் வசித்து வந்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சுகவீனமுற்ற பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க ஆகியோர் இந்த வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த வீட்டில் பல்வேறு பாரம்பரியங்களைச் சேர்ந்த மிகவும் பழமையான புத்தர் சிலைகள் காணப்படுவதாகவும், ரணில் விக்கிரமசிங்கவின் நூலகத்தில் உள்ள அரிய நூல்கள் இலங்கையில் வேறு எங்கும் காணப்படாமல் இருக்கலாம் எனவும் பிரதமருக்கு நெருக்கமான பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE