அடுத்த 10 நாட்களுக்குள் எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடிக்கு ஏதாவது ஒரு தீர்வை வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் குறித்த வேலைத்திட்டத்தை மக்களுக்கு அறிவிப்பதாகவும் ஜனாதிபதி கூறினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பத்து சுயேட்சை உறுப்பினர்களுடன் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இவற்றினை தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாகவும், எதிர்காலத்தில் பிரச்சினைகளுக்கான தீர்வை அறிவிப்பதாக ஜனாதிபதி உறுதியளித்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல தெரிவித்தார்