வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை எதிர்பார்க்கும் அரச சேவையாளர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் இணையதளம் மூலம் தங்கள் தகவல்களை வழங்க முடியும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அத்தோடு அரச சேவையாளர்களுக்கு தகுதியான வேலைவாய்ப்புக்களை வெளிநாடுகளில் இருந்து பெற்றுவருமாறு இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவங்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
நாட்டில் ஏட்பட்டுள்ள நெருக்கடியான நிலையை சமாளிக்க வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்களின் வீதத்தை அதிகரிக்க முன்னெடுக்கப்படும் செயட்பாடுகளின் ஒரு கட்டமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு அரச சேவையாளர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் பொழுது அவர்களின் ஓய்வூதியம், மற்றும் அவர்களின் தொழில் தொடர்பில் எந்த பாதிப்பும் வராத வகையில் ஒரு சுற்றறிக்கையை வெளியிடவும் ஏனைய அமைச்சுக்களுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவங்களின் உரிமையாளர்களிடம் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.